'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான அமலாபால் கடந்த 2018 பிப்ரவரி மாதம் மலேசியாவில் நடைபெற இருந்த ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை தி.நகரில் உள்ள ஒரு நடன பயிற்சி மையத்தில் ஒத்திகை செய்து வந்தார்.
அப்போது அழகேசன் என்பவர் அமலாபாலை மலேசியாவில் உள்ள இப்ராஹிம் என்ற தொழில் அதிபரை ஒரு இரவு சந்தோஷப்படுத்த வேண்டும் என்று கூறி அதற்காக பணபேரமும் நடத்தினார். இதுகுறித்து அமலாபால் தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நடன பயிற்சி மையத்தின் உரிமையாளர் ஸ்ரீதர், அழகேசன், தொழில் அதிபர்கள் பாஸ்கரன், இப்ராஹிம் ஆகியோர் மீது சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சைதாப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கரன், ஸ்ரீதரன் ஆகியோர் தங்கள் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது எனக் கூறி தொழிலதிபர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.