'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், பாடகர் என பல அவதாரங்களை சினிமாவில் எடுத்தவர் டி.ராஜேந்தர். அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமானார். என்றாலும் அவருக்கு வயிற்று பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். முதலில் சிங்கப்பூர் அழைத்துச் செல்ல முடிவு செய்திருந்தனர். இப்போது அந்த திட்டத்தை மாற்றி அமெரிக்கா அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி இன்று இரவு அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவருடன் மகன்கள் சிம்பு, குறளரசன், மகள் இலக்கியா, மனைவி உஷா ஆகியோரும் உடன் செல்கிறார்கள். அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் டி.ராஜேந்தர் அனுமதிக்கப்படுவதாகவும், இரண்டு மாதங்கள் வரை அங்கேயே தங்கி இருந்து அவர் சிகிச்சை பெறுவார் என்றும் குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.