பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

2019ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான படம் கைதி. அதைத்தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கியவர் மீண்டும் விஜய்யின் 67வது படத்தை இயக்குவதற்காக தயாராகி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கைதி 2வை ஆரம்பிக்கலாமா என பதிவிட்டிருந்தார். அவரைத்தொடர்ந்து, சமீபத்தில் லோகேஷ் அளித்த ஒரு பேட்டியில், கைதி -2 படத்தில், ஒரு கட்ட பையுடன் கார்த்தி போய்க் கொண்டிருப்பார். கபடி விளையாட்டு வீரரான அவர் வாங்கிய கோப்பைகள் அதற்குள் இருக்கும் என்று தெரிவித்த லோகேஷ் கனகராஜ், அர்ஜுன் தாஸ் கொலை செய்யப்படவில்லை, அது சஸ்பென்ஸ். கைதி-2 வில் மீண்டும் உயிர் பெற்று வருவார் என்றும் ஒரு சஸ்பென்ஸை உடைத்திருந்தார். இப்படி கைதி -2 படம் குறித்து படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் மாறி மாறி தகவல் வெளியிட்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டு இறுதியில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.




