Advertisement

சிறப்புச்செய்திகள்

டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்து மாதங்கள் ஆறு : வரப்போகும் படங்கள் நுாறு ; எத்தனை தேறும் ஜோரு!

08 ஜூன், 2022 - 11:44 IST
எழுத்தின் அளவு:
Next-6-months-:-Some-important-movies-are-releasing

2022ம் ஆண்டின் ஆரம்பம் கொரோனா ஒமிக்ரான் அலையால் கொஞ்சம் தடுமாறினாலும் சில பல வெற்றிப் படங்களால் அந்த தடுமாற்றம் சரியானது. கடந்த வாரம் வெளிவந்த 'விக்ரம்' படமும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அடுத்த ஆறு மாத காலங்களில் சில முக்கிய படங்கள் வெளியாக உள்ளதால் அவர்களது மகிழ்ச்சி இன்னும் அதிகமாகவும் வாய்ப்புள்ளது.



இந்த ஜுன் மாதத்தில் அருண் விஜய் நடிக்கும் 'யானை', ஆர்ஜே பாலாஜி நடித்துள்ள 'வீட்ல விசேஷங்க', விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' ஆகியவை எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன.



ஜுலை மாதத்தில் மாதவன் நடித்துள்ள 'ராக்கெட்ரி', பார்த்திபன் நடித்துள்ள 'இரவின் நிழல்', தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்', எஸ்ஜே சூர்யா நடித்துள்ள 'பொம்மை' ஆகிய படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.



ஆகஸ்ட் மாதத்தில் விக்ரம் நடிப்பில் 'கோப்ரா', விஷால் நடிப்பில் 'லத்தி', சிம்பு நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்கள் முக்கியமான படங்களாக அமைந்துள்ளன.



வினாயக சதுர்த்தி அன்று கார்த்தி நடித்துள்ள 'விருமன்', சிவகார்த்திகேயனின் 20வது படம் ஆகியவை வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன.



செப்டம்பர் மாதத்தில் ஆர்யா நடிப்பில் 'கேப்டன்', ஜெயம் ரவி நடிப்பில் 'அகிலன்' ஆகிய படங்கள் வர உள்ளன. அம்மாதத்திலேயே மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சரித்திரப் படமான 'பொன்னியின் செல்வன்' படம் செப்., 30ல் வெளியாக உள்ளது.

இவை தவிர மேலும் சில மீடியம் பட்ஜெட் படங்களும் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. தியேட்டர்கள் கிடைப்பதைப் பொறுத்து அப்படங்களும் வெளியாகும். அடுத்த ஆறு மாதங்களில் 100 படங்கள் வரை வெளிவந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹரிஷ் கல்யாண் - அதுல்யா ரவி நடிக்கும் புதிய படம்ஹரிஷ் கல்யாண் - அதுல்யா ரவி நடிக்கும் ... பிரபுதேவா - லாரன்ஸுக்கு பதிலாக விஜய்சேதுபதி வலதுகை வெளியிட்ட தகவல் பிரபுதேவா - லாரன்ஸுக்கு பதிலாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in