டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பின்னணி பாடகர் கேகே என்று அழைக்கப்படுகிற கிருஷ்ணகுமார் கோல்கட்டாவில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. தற்போது அவரது மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: கிருஷ்ணகுமாருக்கு ஏற்கெனவே இதயத்திற்கு செல்லும் பிரதான கரோனரி தமனியில் 80 சதவிகித அடைப்பு இருந்திருக்கிறது. இதுவல்லாமல் சிறிய மற்றும் துணை தமணிகளிலும் அடைப்பு இருந்திருக்கிறது. ஆனால் எங்கும் 100 சதவிகித அடைப்பு காணப்படவில்லை. நிகழ்ச்சியில் அவர் அதிக உற்சாகம் அடைந்திருக்கிறார். இதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டிருக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கிறார். உடனடியாக அவருக்கு சிபிஆர் கொடுத்திருந்தால் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




