பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

சினிமாவில் ஹீரோ, வில்லன், கேரக்டர் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வரும் மன்சூரலிகான் அவ்வப்போது இயக்குனர், தயாரிப்பாளர் என்றும் அவதரிப்பார். மேலும், எப்போது தேர்தல் வந்தாலும் அப்போது ஏதாவது ஒரு கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுபவர், பல தேர்தல்களில் சுயேட்சையாகவும் போட்டியிட்டு தோல்வி அடைந்திருக்கிறார். இந்தநிலையில், தன்னிடம் நிலம் வாங்கித்தருவதாக சொல்லி வாசைக்கனி என்ற நபர் ரூ. 50 லட்சம் வாங்கி அதை ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ள மன்சூரலிகான், அந்த பணத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.




