'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி தொடர்ந்து தரமான சீரியல்களை தயாரித்து வழங்கி வருகிறது. இந்நிலையில், விஜய் டிவியில் பாரதிதாசன் காலனி என்ற புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அதற்கான புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஒரு காலனியில் வாழும் பல குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து பாசத்துடன் வாழ்வது இந்த தொடரின் கதை. பல குடும்பங்கள் வாழும் அந்த காலனியில் நிகழும் பண்டிகை, விழாக்கள், சந்தோஷம், துக்கம், உறவுமுறை, காதல் கதைகள், சண்டை என அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதில் வசந்த் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தொடரின் தொடக்கத்தில் ஹீரோவாக நடித்தவர். ஐஸ்வர்யா ராம்சாய் என்ற புது நடிகை ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலா உட்பட கருணா விலாசினி, பிரபாகர் சந்திரன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.