ஆகஸ்ட் மாதமே திரைக்கு வரும் ரஜினியின் ஜெயிலர் | கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ஜி.எம்.குமார் | காஷ்மீரில் நில அதிர்வு : சென்னை திரும்பிய விஜய் | மகனை தொடர்ந்து அப்பாவை இயக்கும் மாரி செல்வராஜ் | கிரிக்கெட் பயிற்சியில் ‛அட்டகத்தி' தினேஷ் | ஜீவா - அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் | லியோ படத்தில் நடிக்கிறாரா யு-டியூப்பர் இர்பான்? | ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் இணையும் பான் இந்திய படம் | மீண்டும் கதை நாயகியான அபிராமி | டி.வி.யில் நேரடியாக வெளியாகும் ஆரி படம் |
எழுத்தாளர் பெருமாள் முருகன் என்பவர் எழுதிய வறுகறி என்ற சிறுகதையை ‛சேத்துமான்' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளனர். தமிழ் என்ற புதியவர் இயக்கியுள்ளார். தாத்தா பேரனுக்கிடையே உள்ள மாசற்ற அன்பை பேசும் படமாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இதில் தாத்தா வேடத்தில் மாணிக்கமும், பேரன் வேடத்தில் அஸ்வினும் நடித்திருக்கிறார்கள். பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். இப்படம் புனே சர்வதேச திரைப்பட விழா மற்றும் கேரளா சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. அதோடு சென்னை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படத்திற்கான விருது பெற்றது. இந்நிலையில் இந்த படம் மே 27ல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.