2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழா இந்தியன் பனோரமா என்று அழைக்கப்படும் கோவா சர்வதேச திரைப்பட விழா. உலக அளவில் டாப் 10 திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான 53வது சர்வதேச திரைப்பட விழா வருகிற நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகை தீபிகா படுகோன், தமன்னா, நடிகர்கள் ஆர் மாதவன், நவாசுதீன் சித்திக், இசை அமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கலந்து கொண்டனர்.