இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா | பிளாஷ்பேக்: அருணாச்சலம் முன்னோடி 'பணம் படுத்தும் பாடு' | என்னது, பாகுபலி பிரபாஸ் வயது 46 ஆ? | 2ம் பாக ஜுரம் தான் மலைக்கோட்டை வாலிபன் தோல்விக்கு காரணம் : தயாரிப்பாளர் சொன்ன புது தகவல் | எதிர்த்துப் போட்டியிட்ட வில்லன் நடிகரையும் உதவிக்கு இணைத்துக் கொண்ட ஸ்வேதா மேனன் | ஹாட்ரிக் வெற்றியால் படு பிஸியான பிரதீப் ரங்கநாதன் | அந்த ஹீரோவின் கால்ஷீட் கிடைக்காததால் தான் வாத்தி படத்தில் தனுஷ் நடித்தார் : வெங்கி அட்லூரி | லோகா படம் நேரடியாக தெலுங்கில் உருவாகி இருந்தால் வெற்றி பெற்றிருக்காது : தயாரிப்பளர் நாகவம்சி |
பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். மாறன் படத்திற்கு பிறகு தமிழில் புதிய படங்கள் இல்லாததால் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வரும் மாளவிகா, தனது புதிய புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருவதோடு, ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்.
இந்நிலையில் ரசிகர்கள் உடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், மாறன் படத்தில் தனுசுடன் நடித்த படுக்கையறை காட்சி எத்தனை முறை படமாக்கப்பட்டது என்று கேட்டார். அதற்கு, ‛‛இந்த கேள்வியை பார்க்கும்போது உங்களது மண்டைக்குள் இருக்கும் மோசமான எண்ணம் தான் தெரிய வருகிறது'' என பதிலடி கொடுத்துள்ளார் மாளவிகா.