மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
நடிகர் விஜய் தற்போது தெலுங்கு பட இயக்குனர் வம்சி பதப்பள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்கிறார் . இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் .
விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் . முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ஷாம் , யோகிபாபு ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர் .இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது .
விஜய் நடிக்கும் 66-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. இந்த நிலையில் மரியாதை நிமிர்த்தமாக நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் வம்சி ஆகியோர் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்துள்ளனர் . இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .