காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
பரபரப்புக்கு புகழ்பெற்ற கங்கனா, நடிப்பு என்று வந்துவிட்டால் அதிலும் சாதனை படைப்பார். நிஜ வாழ்க்கையில் சிறந்த பக்திமான். கங்கனா தற்போது தாகட் என்ற படத்தில் நடித்துள்ளார். இது ஒரு அதிரடி ஆக்ஷன் ஹீரோயின் படம். இந்த படத்தில் அவருடன் அர்ஜுன் ராம்பால், திவ்யா தத்தா நடித்துள்ளனர். வருகிற 20ம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தின் புரமோசன் பணியில் ஈடுபட்டிருக்கும் கங்கனா, பாலிவுட் நடிகர்கள் தனக்கு உதவவில்லை என்று சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் கங்கனா நேற்று திடீரென திருப்பதி வந்தார். மெரூன் கலர் பட்டுப்புடவை அணிந்து அதிகாலையில் சாமி தரிசனம் செய்தார்.
சுவாமி தரிசனத்தை தொடர்ந்து ஆலயத்திலுள்ள ரங்கநாயகி மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்தப் பிரசாதங்களைப் அதிகாரிகள் வழங்கினர்.
சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தான் நடித்து வெளிவரவுள்ள தாகட் திரைப்படம் வெளியாக உள்ளதை அடுத்து வெற்றி பெற வேண்டுமென சாமி தரிசனம் செய்தேன். ரசிகர்களாகிய உங்களுடைய ஆசீர்வாதம் எனக்கு வேண்டும். தாகட் தயாரிப்பாளர் தீபக்முகுத்ஜி, அவரது மனைவி கிருஷ்ணா முகுத்ஜி மற்றும் சில நண்பர்களும் என்னுடன் வந்திருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை செய்த விஷ்ணு மஞ்சுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தெய்வீக தரிசனத்திற்குப் பிறகு ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். என்றார்.