நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ஊரு, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | 'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் |
காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறியவர் தான் தெலுங்கு நடிகர் சுனில். அது கூட இயக்குனர் ராஜமவுலி, சிறிய நடிகர்களை வைத்து சின்ன பட்ஜெட்டிலும் கூட தன்னால் வெற்றிகொடுக்க முடியும் என நிரூபிக்க இறங்கிய முயற்சியின் காரணமாக, அவர் இயக்கிய 'மரியாத ராமண்ணா' படத்தின் மூலம் அதிர்ஷ்டத்தால் ஹீரோவானவர் சுனில். ஆனால் அதன்பிறகு சுனில் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. அதனால் தற்போது மீண்டும் குணச்சித்திர மற்றும் வில்லன் நடிப்புக்கு மாறிய சுனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
இந்த படம் பான் இந்தியா ரிலீசாக வெளியானதால் ஹிந்தியிலும் இவரது நடிப்புக்கு வரவேற்பு கிடைத்ததுடன் தற்போது இரண்டு இந்தி படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் சுனில். இதுதவிர தமிழிலும் சில படங்களில் நடிக்க இவரை அணுகி உள்ளார்களாம். ஏற்கனவே கலர் போட்டோ, டிஸ்கோ ராஜா, தற்போது புஷ்பா என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தான் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்று வருவதால் தொடர்ந்து இனி அதே ரூட்டில் பயணிக்க முடிவு செய்துள்ளாராம் சுனில்.