இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
பிரபல ஹிந்தி நடிகரான அக்சய் குமாருக்குக் கொரானோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவர் கொரானோவால் பாதிக்கப்பட்டார். இப்போது இரண்டாவது முறையாக அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா சார்பாக அவர் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவர், “கேன்ஸ் 2022 திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பாக கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். ஆனால், கொரானோ பாசிட்டிவ் வந்து விட்டது. நான் ஓய்வெடுக்க வேண்டும். அனுராக் தாக்கூர் மற்றும் நமது குழுவினருக்கு எனது வாழ்த்துகள். அங்கு இருக்கும் வாய்ப்பைத் தவறிவிடுகிறேன்,” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
அக்சய்குமார் நடித்துள்ள 'பிருத்விராஜ்' படம் ஜுன் 3ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதற்கான பிரமோஷன் நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொள்ள முடியாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.