இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சூது கவ்வும் படத்தில் அறிமுகமான அசோக் செல்வன், அதன்பிறகு பீட்சா 2, தெகிடி, ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, கூட்டத்தில் ஒருவன் படங்களில் நடித்தார். இந்த படங்கள் அவருக்கு சரியாக கைகொடுக்காமல் ஓ மை கடவுளே படத்தை அவரே தயாரித்து நடித்தார். அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பிசியாகி விட்டார் அசோக் செல்வன்.
மரைக்காயர், சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல் என அடுத்தடுத்து இவரது படங்கள் திரைக்கு வந்துள்ளன. இந்த நிலையைில் வேழம் என்ற படத்தில் அவர் ஆக்ஷன் ஹீரோவாகி இருக்கிறார். இப்படத்தை கே4 கிரியேஷன் சார்பில் கேசவன் தயாரித்துள்ளார். சந்தீப் ஷ்யாம் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஐஸ்வர்யா மேனன் மற்றும் ஜனனி என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.