'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல் | பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி | கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி | எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி |

மலையாளத்து இறக்குமதியான நிகிதா, தமிழ் சின்னத்திரையில் அருந்ததி சீரியல் மூலம் அறிமுகமானார். அதில் ஹோம்லியான லுக்கில் நடித்திருந்தார். நன்றாக சென்று கொண்டிருந்த அருந்ததி தொடர் திடீரென முடித்து வைக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் ஜீ தமிழின் சூர்யவம்சம் தொடரில் மாடர்ன் பெண்ணாக என்ட்ரி கொடுத்தார். ஏனோ, அந்த தொடரும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருப்பினும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் முன்னணி சீரியல் ஹீரோயின்களுக்கு இணையக நிகிதாவும் ரீச்சாகியுள்ளார். கம்பேக்குக்காக காத்திருக்கும் நிகிதா பதிவிடும் சில புகைப்படங்களை அவரது ரசிகர்கள் பீஸ்ட் மோடில் வைரல் செய்து வருகின்றனர். அந்த வகையில் அவர் பாவாடை தாவணியில் அழகு சிலையென நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.