நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
70 வயதானாலும் மம்முட்டி தற்போதும் இளம் ஹீரோவை போல கதாநாயகனாகவே நடித்து வருகிறார். அதேசமயம் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என அடம் பிடிக்காமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார் மம்முட்டி. அந்த வகையில் தற்போது அவர் நடித்துள்ள புழு என்கிற திரைப்படத்தில் இதுவரை அவர் ஏற்று நடித்திராத ஒரு வேடத்தில் அதிலும் குறிப்பாக நெகட்டிவ் சாயல் கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் மம்முட்டி ஒரு குடும்பத் தலைவனாகவும் அவரது மனைவியாக பார்வதியும் டீன் ஏஜ் பையன் ஒருவனுக்கு இருவரும் பெற்றோராகவும் நடித்துள்ளனர்.
இந்த படம் மே 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பெண் இயக்குனர் ரதீனா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கதை எழுதியுள்ள வர்ஷாத், மம்முட்டி நடித்து வந்த உண்ட என்கிற படப்பிடிப்பின்போது இந்த கதையை கூறியுள்ளார்.
படத்தில் தனக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என்றதும் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு கெட்டவன் என்பதற்கான காரணங்களை வலுவாக வைத்திருக்கிறீர்களா என்றும், இதில் எனக்கு நடிப்பை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா என்றும் கேட்டுள்ளார் மம்முட்டி. நிச்சயமாக உங்களது கதாபாத்திரத்திற்கு வலுவான பின்னணி உள்ளது. அதுமட்டுமல்ல படம் முழுவதும் உங்கள் பார்வையில்தான் கதை நகரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியதும் உடனே இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம் மம்முட்டி.