வதந்தி வெப் தொடர் 2ம் பாகத்தில் சசிகுமார்? | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் இரு படங்கள் | மனோஜ் பாரதி உடல் தகனம் : அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி | மூக்குத்தி அம்மன் 2 ; சுந்தர்.சி, நயன்தாரா மோதலா? : குஷ்பூ வெளியிட்ட தகவல் | பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் | ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகி இவரா? | சமந்தாவின் நிறைவேறாத ஆசை | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் | புஷ்பா 2 இயக்குனருக்கு இப்படி ஒரு மகளா? ஓடிடி-யில் கலக்கும் படமாக இருக்குமா |
சினிமாவில் அறிமுகமாகி கடந்த 20 வருடங்களாய் முன்னணியில் இருப்பவர் நடிகை த்ரிஷா. இன்று தன்னுடைய 40வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி திருப்பதியில் தனது அம்மா உடன் சென்று சாமி தரிசனம் செய்தார் த்ரிஷா. தரிசனம் முடிந்து வெளியே வந்த த்ரிஷா உடன் ஏராளமான ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதனிடையே த்ரிஷா தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛20 ஆண்டுகள். உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் நன்றியுடனும் உணருகிறேன். இன்னும் நல்ல படைப்புகள், இயக்குனர்கள் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். வெற்றியோ, தோல்வியோ எனக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் எனது ரசிகர்களுக்கு பெரிய நன்றி. அவர்கள் தரும் ஊக்கமும், ஆதரவும் தான் என்னை இன்னும் நல்ல படங்களில் நடிக்க உந்துதலாக இருக்கிறது'' என்றார்.
தற்போது ‛பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ளார் த்ரிஷா. அடுத்து அருண் வசீகரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‛தி ரோட்' என பெயரிட்டு, பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த படம் மதுரை கதைக்களத்தில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் பழிவாங்கும் கதையில் உருவாகிறது. மேலும் படத்திற்கு தி ரோட் - ரிவென்ஞ் இன்று 462 கி.மீ என டேக் லைன் கொடுத்துள்ளனர்.