குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ளது.
தெலுங்கு, கன்னட மொழியில் வெளியாகி பான்-இந்தியா படமாக வசூலைக் குவித்த படங்களுக்கு பதில் சொல்லும் விதமாக தமிழில் இந்தப் படம் அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
இப்படத்தின் இரண்டு பாகங்களின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ரூ.125 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் 1000 கோடி வசூலைக் கடந்தால்தான் தமிழ் சினிமாவுக்குப் பெருமை.
மணிரத்னம் இயக்கி கடைசியாக வெளிவந்த படம் 'செக்கச் சிவந்த வானம்'. அப்படத்திற்குப் பிறகு 'பொன்னியின் செல்வன்' படத்திற்காக மட்டுமே அவர் உழைத்து வருகிறார். மணிரத்னம் 'டச்' உடன் 'பொன்னியின் செல்வன்' இருந்தால் 1000 கோடி வசூல் எளிதுதான்.