விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்த 'கேஜிஎப் 2' படம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது. மிகப் பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற இன்று இப்படம் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது.
தமிழகத்தில் 350க்கும் கூடுதலான தியேட்டர்களில் இன்னமும் தொடர்ந்து வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது. ராக்கி பாயின் ஓட்டத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி என படத்தைத் தமிழகத்தில் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தில் மட்டும் இப்படம் 75 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிந்தியில் 350 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கிறதாம். கர்நாடகாவில் 150 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 125 கோடி, பிற மாநிலங்களில் 60 கோடி, கேரளாவில் 50 கோடி, வெளிநாடுகளில் 160 கோடி என 970 கோடி ரூபாய் வசூலை மொத்தமாகப் பெற்றுள்ளது. இன்றைய வசூலுக்குப் பிறகு 1000 கோடி வசூலைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.