விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி | ஜன., 30ல் திரைக்கு வரும் ‛கருப்பு பல்சர்' | மீண்டும் லோகேஷ், ரத்னகுமார் கூட்டணி | மீண்டும் இணையும் விஜய் சேதுபதி, நலன் குமாரசாமி கூட்டணி | விஜய் பட தலைப்பில் கென் கருணாஸ் | வழக்கு போட்டதை தவிர்த்திருக்க வேண்டுமா 'ஜனநாயகன்' | தெலுங்கிற்குத் தாவும் முன்னணி இயக்குனர்கள் : சம்பளம் காரணமா? |

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான 'கேஜிஎப் 2' படம் ரூ.1100 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்து சஞ்சய் தத், மனம் திறந்து நெகிழ்ச்சியான பதிவினை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், எப்போதும் சில படங்கள் மற்றவைகளை விட சிறப்பாக இருக்கும். அந்த வகையில் எனக்கு கிடைத்த படம்தான் 'கேஜிஎஃப் 2'. இந்தப் படம் என்னுடைய நடிப்புத் திறமையை எனக்கே மீண்டும் நினைவூட்டியது. இதை நான் இதயத்திலிருந்து உணர்ந்துள்ளேன். இந்தப் படம் முடியும்போது சினிமா என்றால் என்ன என்று எனக்கு புரிய வைத்தது.
இயக்குனர் பிரசாந்த் நீல், எனக்கும் ஆதிராவை காட்டினார். என்னுடைய கதாபாத்திரம் மிரட்டலாக வந்ததற்கு இயக்குனர் பிரசாந்த் நீல் தான் காரணம். ஒரு கேப்டன் போன்று எங்களையெல்லாம் வழிநடத்தினார். குடும்பத்தினரும் ரசிகர்களும் தான் என்னுடைய பலம் என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.