ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' | சுதந்திர போராளி கதாபாத்திரத்தில் புகழ் | திலீப் படத்தில் இணைந்த ஜீவா | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சூர்யா - பிரித்விராஜ் சந்திப்பு | யுடியூப் விமர்சகரை திட்டியது ஏன்? : உன்னி முகுந்தன் விளக்கம் |
பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் கவின் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் . நட்புன்னா என்னனு தெரியுமா, லிப்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார் .மேலும் ஆகாஷ் வாணி என்ற வெப் தொடரிலும், 'ஊர்குருவி' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இந்த படங்களுக்கு பிறகு அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி ஆகியோர் நடிக்கின்றனர்.
ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகியுள்ளது . டாடா என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது .