சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

தமிழ், தெலுங்கில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அனுஷ்கா. 'பாகுபலி' இரண்டு பாகங்களிலும் நடித்து பெரிய வரவேற்பையும் பெற்றார். அதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த 'பாகமதி' படம் கூட வெற்றி பெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடித்த 'நிசப்தம்' படம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்குப் பிறகு அவரது எந்தப் படங்களும் வெளியாகவில்லை.
நடிக்க வந்த வாய்ப்புகள் பலவற்றையும் அவர் வேண்டாமென சொன்னதாகத் தகவல். தற்போது ஒரே ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். 40ஐத் தொட்டுவிட்டதால் இன்றைய இளம் நடிகர்களுடன் அனுஷ்காவால் ஜோடி சேர முடியாததும் ஒரு காரணம் என்கிறார்கள்.
அவ்வப்போது சமூக வலைத்தளம் பக்கம் எட்டிப் பார்க்கும் அனுஷ்கா, நேற்று அவருடைய அப்பாவின் பிறந்தநாளுக்காக அப்பாவுடன் விதவிதமாக எடுத்த செல்பி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “வருடங்கள் கடந்து போனாலும், நீங்கள் எவ்வளவு வயதை அடைவீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல. நான் எப்போதும் உங்கள் குட்டிப் பொண்ணு தான். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா,” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.