ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
3 ஆண்டுகளுக்கு முன்பு விமல் நடித்த களவாணி 2ம் பாகம் வெளிவந்தது. இந்த படத்திற்காக விமல் தன்னிடம் 5 கோடி ரூபாய் வரை வாங்கிவிட்டு அதனை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார் என்று அரசு பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோபி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக விமல் நேற்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விளக்க மனு கொடுத்தார். அதில் 5 கோடி மோசடி புகாருக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. அவர்கள்தான் என்னை மிரட்டி பணம் பறிக்க நினைக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
அந்த மனுவில் விமல் கூறியிருப்பதாவது: கடந்த 2016ம் ஆண்டு இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கிய மன்னர் வகையறா என்ற படத்தில் நடித்தேன். பண பிரச்னை காரணமாக அந்த படத்தை எனது ஏ3வி சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டேன். இந்த படத்தை முதலில் தயாரித்தது கணேஷ் என்பவர். அவரால் படத்தை தயாரிக்க முடியவில்லை என்பதால் அவர் விலகிவிட்டார். பிறகு சிங்காரவேலன் பைனான்சியர் கோபி என்பவரை அறிமுகம் செய்து அவர் மூலம் படத்தை தயாரிக்க பணம் ஏற்பாடு செய்து தந்தார். அவர்களை நம்பி பல காசோலைகள் மற்றும் ஆவணங்களிலும் கையெழுத்திட்டேன்.
இந்நிலையில் படத்தை தயாரிக்க 3 கோடி செலவானதாகவும், அதனை விற்பனை செய்ததில் 4 கோடி கிடைத்ததாகவும் சிங்காரவேலன் தெரிவித்தார். அந்த 4 கோடி பணமும் படத்திற்காக கடனாக வாங்கிய 3 கோடி பணத்திற்கான வட்டி என சிங்காரவேலன் தெரிவித்தார். அசல் 3 கோடியை படங்கள் நடித்த சம்பளத்தின் மூலம் கொடுத்தேன். இதனிடையே மன்னர் வகையறா படத்தை விற்பனை செய்ததில் 8 கோடி கிடைத்ததை மறைத்து பொய் கணக்கு மூலம் என்னை சிங்காரவேலன் மோசடி செய்து விட்டார்.
மேலும் சிங்காரவேலன் செய்த மோசடிக்கு எனது பெயரை பயன்படுத்தியுள்ளார். அதற்கு உடந்தையாக கோபி மற்றும் விக்னேஷ், கண்ணன், திருநாவுக்கரசு ஆகியோர் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது 2021ம் ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிங்காரவேலன் உட்பட பலர் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சிங்காரவேலன் களவாணி-2 படத்திற்கு எதிராக பொய் புகார் கொடுத்துள்ளார். எனவே என்னிடம் பெற்ற வங்கி காசோலைகள் மற்றும் ஆவணங்களை தவறாக பயன்படுத்த கூடாது, இது சட்டப்படி குற்றமாகும். எனவே என் மீது பொய் புகார் அளித்து எனது பெயரை கெடுக்கும் கோபி, சிங்காரவேலன், திருநாவுக்கரசு, விக்னேஷ், சிவா, வேல்முருகன் உள்ளிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.