பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. ஹிந்தியிலும் நடிக்க தொடங்கி உள்ளார். தற்போது அவரது நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதுதவிர யசோதா படத்தில் நடித்து வருகிறார். தனது படங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்.
இந்நிலையில் சமூகவலைளத்தில் ரசிகர்கள் உடன் கலந்துரையாடினார். அப்போது ஒருவர் உங்களின் முதல் சம்பளம் எவ்வளவு என கேட்டார். அதற்கு, ‛‛நான் பத்தாம் வகுப்போ, 11ம் வகுப்போ படித்தபோது நிகழ்ச்சி ஒன்றில் வரவேற்பு பெண்ணாக பலமணிநேரம் பணிபுரிந்தேன். அதற்காக ரூ.500 சம்பளம் பெற்றேன். அதுதான் எனது முதல் சம்பளம்'' என தெரிவித்துள்ளார்.