மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை அடுத்து தற்போது சட்டம் என் கையில் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் காமெடி நடிகர் சதீஷ். அதோடு அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்து வரும் ஹாஸ்டல் என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, யெஸ் அதேதான் என்று கேப்ஷனாக பதிவு செய்திருக்கிறார் சதீஷ். அதையடுத்து அந்த கேப்ஷனை டெலிட் செய்துவிட்டு ஹாஸ்டல் டேஸ் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பிரியா பவானி சங்கர் தனது டுவிட்டரில் ஏதோ டெலிட் பண்ணி இருக்கீங்கன்னு நம்ம மக்கள் பேசுகிறார்களே என்று ஒரு பதிவு போட்டுள்ளார். அதற்கு சதீஷ், எதற்கு இன்னொரு கிசுகிசு என்று பதில் கொடுத்துள்ளார். சதீஷ், பிரியா பவானி சங்கரின் இந்த அரட்டை பதிவுகள் வைரலாகின.