சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
சின்னத்திரையின் வெற்றி இயக்குநர்களில் ஒருவரான திருச்செல்வம் நீண்ட இடைவேளைக்கு பிறகு கம்பேக் கொடுத்திருக்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. ஆரம்பம் முதலே பெரிய அளவில் எதிர்பார்ப்பை தூண்டிய இந்த தொடர் தற்போது டாப் கியரில் கலக்கிக் கொண்டிருக்கிறது. கதாபாத்திரங்களுக்கு ஏற்றார் போல் வசனங்களும் கச்சிதமாக பொருந்தி கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக குணசேகரனின் 'க்ரே ஷேட்' வசனங்கள் ஒருபுறம், நந்தினியின் காமெடி கவுண்டர்கள் மற்றொருபுறம் என யாருப்பா இந்த டயலாக் ரைட்டர் என ரசிகர்களை கேள்வி கேட்க வைத்தது.
இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலின் டயலாக ரைட்டர் யார் என்ற ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை, பிரபல சீரியல் நடிகை ஸ்ரீவித்யா தான். என்னவளே, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், ஜெயம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். திருச்செல்வம் இயக்கிய 'கோலங்கள்' ஆர்த்தியையும், 'தென்றல்' சாருலதாவையும் சின்னத்திரை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டார்கள். திறமையான நடிகையான ஸ்ரீவித்யா, திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் நடிப்பில் கவனம் செலுத்தாத நிலையில் தற்போது 'எதிர்நீச்சல்' வசனகர்த்தாவாக மாஸாக கம்பேக் கொடுத்துள்ளார்.