Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகராகவும் முத்திரை பதிப்பாரா செல்வராகவன் ?

11 ஏப், 2022 - 13:31 IST
எழுத்தின் அளவு:
Is-Selvaraghavan-give-as-success-as-an-actor

தமிழ் சினிமாவை மற்றுமொரு புதிய பாதைக்குள் கொண்டு சென்ற இயக்குனர்களில் செல்வராகவனும் முக்கியமானவர். தன்னுடைய முதல் படமான 'காதல் கொண்டேன்' படத்திலேயே ஒரு வித்தியாசமான காதலைக் காட்டி முத்திரை பதித்தவர். தொடர்ந்து அவரது இயக்கத்தில் வெளிவந்த '7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை' ஆகிய படங்கள் வெற்றி தோல்வி என்பதைக் கடந்து இன்றும் ரசிக்கப்படுபவை. அதில் 'இரண்டாம் உலகம்' மட்டுமே விதி விலக்கு.

தற்போது தனுஷ் நடிக்க 'நானே வருவேன்' படத்தை இயக்கி முடித்துள்ள செல்வராகவன், நாளை மறுதினம் விஜய் நடித்து வெளிவர இருக்கும் 'பீஸ்ட்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார். செல்வராகவன் கதாநாயகனாக ஒப்பந்தம் ஆன முதல் படம் 'சாணி காயிதம்'. அப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்குக் கிடைத்த வாய்ப்பு 'பீஸ்ட்'. இப்படத்தில் உளவுத் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய் நடிக்கும் படம் என்பதால் நடிகராக செல்வராகவனும் அதிகம் கவனிக்கப்படுவார். படத்தின் டிரைலரில் அவர்தான் முதலில் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குனராக தனி முத்திரை பதித்த செல்வராகவன் நடிகராகவும் முத்திரை பதிப்பாரா என்பது இரண்டு நாளில் தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மக்களை போட்டி போட்டு வரவழைக்கும் 'பீஸ்ட், கேஜிஎப் 2'மக்களை போட்டி போட்டு வரவழைக்கும் ... அமெரிக்காவில் 546 தியேட்டர்களில் 'பீஸ்ட்' வெளியீடு அமெரிக்காவில் 546 தியேட்டர்களில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
11 ஏப், 2022 - 13:54 Report Abuse
KayD Doubt தான்... Trailer la இவர் acting ரொம்ப artificial aa இருந்துச்சு.. சாணி காகிதம் வந்தால் தெரியும் இவர் குட் actor as illai director aa என்று.. இப்போ directors இல்லை eppovun famous directors oru stage ku பிறகு acting தான்.. Example bharathi ராஜா மணிவண்ணன் ippo GVM and this guy
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in