ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
கொரோனா மூன்றாவது அலைக்குப் பிறகு வெளிவந்த படங்களில் 'வலிமை, எதற்கும் துணிந்தவன், ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் ஓரளவிற்கு மக்களை தியேட்டர்கள் பக்கம் வரவழைத்தன. இருப்பினும் இந்தப் படங்களுக்கான முன்பதிவுகள் மிகச் சுமாராகவே இருந்தன.
ஆனால், அதை இந்த வாரம் வெளிவர இருக்கும் 'பீஸ்ட், கேஜிஎப் 2' படங்கள் மாற்றிக் காட்டியுள்ளன. இரண்டு படங்களுக்குமான முன்பதிவு இந்த வார இறுதி வரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு படங்களையும் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அதற்கு சாட்சி முன்பதிவுக்கான வரவேற்பு தான்.
பொதுவாக விஜய் படம் என்றாலே குழந்தைகளும், பெண்களும் ஆவலுடன் வந்து பார்ப்பார்கள். 'பீஸ்ட்' படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளதால் அது அவர்களிடத்தில் படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ' 'கேஜிஎப்' படத்தின் முதல் பாகம் வெளிவந்த போது கிடைத்த வரவேற்பைக் காட்டிலும் அந்தப் படத்தை டிவியில் அடிக்கடி காட்டும் போது பார்த்தவர்கள் அதிகம்.
எனவே, பீஸ்ட், கேஜிஎப் 2 இரண்டு படங்களும் இந்த வார இறுதியில் உலகம் முழுவதும் வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.