திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பிற்கு பிறகு அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிகரித்து உள்ளது. அந்த வகையில் தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வில்லனாக நடித்துள்ள டான் திரைப்படம் மே 13 வெளியாக இருக்கிறது. அதேசமயம் அவர் ஹீரோவாக நடித்துள்ள கடமையை செய் என்கிற படமும் இதே மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை வெங்கட்ராகவன் இயக்கியுள்ளார். இவர் சுந்தர்.சி நடித்த முத்தின கத்திரிக்காய் என்கிற படத்தை இயக்கியவர்.
இந்த கடமையை செய் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சிம்புவின் தந்தையான டி ராஜேந்தர் தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மூலமாக வெளியிட இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்ததால் கிடைத்த வெற்றியும் அந்தப் படத்தில் ஏற்பட்ட நட்பும் தான் எஸ்.ஜே.சூர்யா படத்தை சிம்புவின் நிறுவனம் வெளியிடும் அளவிற்கு கொண்டுவந்துள்ளது என்று திரையுலகில் பேசப்படுகிறது.