நானி - சாய்பல்லவி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை | எப்படி இருந்த கீர்த்தி இப்படி | கனடாவிலிருந்து வந்த பாடகி | வருகிறான் ‛சோழா சோழா' | குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சூரி | திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ் | ‛லால் சிங் தத்தா' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இரண்டு பேர் கைது | ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன் | ஆர்ஆர்ஆர் படத்திற்கு 99 சதவீதம் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு : அனுராக் காஷ்யப் கணிப்பு | கிர்த்தி ஷெட்டிக்கு இரண்டாவது அதிர்ச்சி |
இசை அமைத்த படங்களின் இசையை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், இசை நிறுவனங்கள் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியன் ரிகார்டு உற்பத்தி நிறுவனம் தாக்கல் செய்த மனு: இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்து வெளியான 20 தமிழ் படங்கள் மற்றும் இதர மொழிகளில் வெளியான சில படங்களுக்கு, தயாரிப்பாளர்களிடம் இருந்து பதிப்புரிமை பெற்றுஉள்ளோம். அதனால், இந்த படங்களின் இசையை பயன்படுத்த, இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 22 படங்களுக்கான இசையை பயன்படுத்த, இளையராஜா மற்றும் இரண்டு மியூசிக் நிறுவனங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு, நீதிபதிகள் துரைசாமி, தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இளையராஜா சார்பில், மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர்கள் கே.தியாகராஜன், ஏ.சரவணன் ஆஜராகினர். மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி, இந்தியன் ரிக்கார்டு உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட மூன்று இசை நிறுவனங்களுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.