ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஸ்பைடர் மேன் நோ வே ஹோம், அன்சார்டட் படங்களை தொடர்ந்து சோனி நிறுவனத்தின் அடுத்த படம் மோர்பியஸ். மார்வல் கதாபாத்திரங்களில் ஒன்றான மோர்பியஸ் கேரக்டரை பிரதான கேரக்டராக்கி வெளிரும் படம். கதைப்படி மிகச்சிறந்த டாக்டரான மோர்பியஸ் ரத்தம் சம்பந்தப்பட்ட விநோத நோயால் பாதிக்கப்படுகிறார். அவருக்குள் புகும் தீய சக்தியை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் இந்தப்படத்தின் திரைக்கதை.
படத்தை, டேனியல் எஸ்பினொசா இயக்கியுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற ஜாரெட் லெடோ மோர்பியஸ் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் மாட் ஸ்மித், அட்ரியா அர்ஜோனா, ஜேர்ட் ஹாரிஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஒரே சமயத்தில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நாளை (ஏப் 1) தியேட்டர்களில் வெளியாகிறது.