காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள படம் மாயோன். நடிகர் சிபி சத்யராஜ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ஒரு புராண திரில்லர் திரைப்படம். இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் கூறியதாவது: இதன் கதை ஒரு பழமையான கோவிலின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. சென்சாரில் எந்த ஒரு காட்சியும் வெட்டப்படாமல் யு சான்றிதழ் பெற்றுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக பெரிய திரையில் முழு அனுபவத்தை பெறுவதற்காக 'ஆடியோ விளக்க' பாணியில் படத்தை உருவாக்கி வருகிறோம். முழுக்க முழுக்க விஷூவல் ட்ரீட்டுடன் படம் தயாராகி உள்ளது. என்றார்.