இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், பாட்டில் மூடி சேலஞ்ச் போல ஒவ்வொரு சீசனுக்கும் ஏதாவது ஒரு சேலஞ்ச் சோசியல் மீடியாவில் டிரெண்டிங் ஆவது வழக்கம். அப்படி லேட்டஸ்டாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அட்டாக் சேலஞ்ச். ஆனால் தனது சொந்த விஷயத்துக்காக இதை துவங்கி வைத்தததே நடிகை ரகுல் பிரீத் சிங் தான்.
ஆம்.. தற்போது அவர் ஹிந்தியில் நடித்துள்ள 'அட்டாக்' என்கிற படம் வரும் ஏப்-1ஆம் தேதி வெளியாகிறது. அதையொட்டி அதிக அளவிலான வெயிட் கொண்ட பளுதூக்கும் வீடியோ ஒன்றை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொண்ட அவர், அட்டாக் சேலஞ்ச் என்கிற பெயரில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்புக்கு சவால் விட்டார்.. அதை நிறைவேற்றிய டைகர் ஷெராப், சமந்தாவுக்கு அந்த சவாலை திருப்பி விட்டார்.
எந்நேரமும் உடற்பயிற்சி குறித்த கவனத்திலேயே இருக்கும் சமந்தா ஜஸ்ட் லைக் தட் அதை செய்து முடித்துள்ளதுடன், பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருக்கு இந்த அட்டாக் சேலஞ்சை விடுத்துள்ளார். சமந்தாவின் இந்த வெயிட் தூக்கும் வீடியோவை பார்த்துவிட்டு இதை துவங்கி வைத்த ரகுல் பிரீத் சிங் “வாவ்.. சாதிச்சிட்டியே” என கமெண்ட் அடித்துள்ளார்.