டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? | ஒருங்கிணைந்து செயல்படுவோம் : தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு | அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள், ஆனாலும்…. | புதிய தொழிலாளர் சங்கத்திற்கு ஆள் சேர்க்கும் தயாரிப்பாளர் சங்கம் | பிளாஷ்பேக் : நடிகையாக இருந்து டப்பிங் கலைஞராக மாறியவர் | பிளாஷ்பேக்: விஸ்வாமித்ரரை காப்பாற்றிய என்.எஸ்.கிருஷ்ணன் | 50 கோடிக்கு பேரம் பேசும் சிவகார்த்திகேயனின் பராசக்தி | ஓடிடி டீலிங் முடிந்த இட்லி கடை : என்ன விலை தெரியுமா? | 23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! |
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடித்துள்ள ‛பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் .
காமெடி கலந்த குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா, தமன்னா, க்ரீத்தி சானோன் உள்ளிட்ட பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஏப்ரல் 6-ஆம் தேதி துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .