டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தென்னிந்திய சினிமாவின் முக்கியமான பழம்பெரும் நடிகை லட்சுமி. தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக அவர் 2015ம் ஆண்டு வெளியான மூணே மூணு வார்த்தை என்ற படத்தில் நடித்தார். மதுமிதா இயக்கிய இந்த படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஜோடியாக நடித்தார்.
அதன்பிறகு தெலுங்கில் சமந்தாவுடன் ஓ பேபி படத்தில் நடித்தவர் இப்போது கன்னடப் படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கொரோனா காலத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட படம். இப்போது நிலைமை சரியானதும் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இயக்குநர் கதையை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது, கதையும் பிடித்திருந்தது அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஒரே பிரச்சினையை வெவ்வேறு நபர்கள் எப்படி கையாளுகிறார்கள் என்பதுதான் படத்தின் ஒன் லைன். நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன். இன்னும் உயிரோடு இருப்பதுதான் என்னை நடிக்க வைக்கிறது, நான் விரும்பும் விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். இளைய தலைமுறையிடமிருந்தும் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். என்றார்.




