ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள இடியட் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இடியட் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் மிர்ச்சி சிவா, ரெடின் கிங்ஸ்லி ஆகிய இருவரும் நடித்துள்ள காட்சி இடம் பெற்றுள்ளது. அதில், அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக மிர்ச்சி சிவாவிடம் சொல்கிறார் ரெடின் கிங்ஸ்லி. அப்போது பேய் போன்று அவர்கள் பின்னால் வந்து ரெடின் கிங்ஸ்லியின் காலை பிடிக்கிறது. அதைப் பார்த்து பேய் என்று தெரியாமல் கட்சி தொண்டர் என நினைத்து அதற்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதாக மிர்ச்சி சிவா கூறுகிறார். அப்போது அந்த பேய் இவர்களைப் பார்த்து சீறுகிறது. அதைப் பார்த்து துணை முதல்வர் பதவி கொடுத்ததும் திமிர் வந்துருச்சு பார்த்தியா? என்று மிர்ச்சி சிவா கூறுவதோடு வீடியோ முடிகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இப்படத்தில் மிர்ச்சி சிவாவுடன், நிக்கி கல்ராணி, ஊர்வசி, அக்ஷரா கவுடா, மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளார்கள்.