ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

புதியவர்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் டூ ஓவர். ஷார்வி இயக்கி உள்ளார். மானவ், மரியா பின்டோ, நெஃபி அமெலியா நடித்துள்ளனர். ரியல் இமேஜ் பிலிம்ஸ் சார்பில் எஸ். சரவணன் தயாரித்துள்ளார். பி.ஜி.வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஷார்வி கூறியதாவது: ஒரு நடுத்தர குடுபத்தின் தலைவனான நாயகன் சிவா, தான் பார்த்து வந்த வேலை இழக்கிறான். அதனால் ஏற்படும் குடும்ப சூழல். இதனால் கணவன் மனைவி பிரிவு, சிவாவின் புதிய வேலை தேடல், அதில் அவன் எதிர்கொள்ளும் இன்னல்கள் என கதையோட்டம் நிகழ்கிறது. இதில் அவன் வெற்றி பெற்றானா..?, அவனது குடும்பம் அவனுடன் இணைந்ததா..? என்பதாக கதை நிறைவடைகிறது.
விஷயங்கள் எவ்வளவு இருண்டதாகத் தோன்றினாலும், உங்கள் வாழ்க்கை, இலக்குகள் உட்பட, எதனையும் ஒருபோதும் கைவிடக்கூடாது என்பதே கதையின் கருத்தாகும். என்றார்.




