படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் |

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மாவில் நடித்து புகழ் பெற்ற ரோஷினி ஹரிப்ரியன் முதலில் மாடலிங் துறையில் தான் காலடி எடுத்து வைத்தார். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்பதை தீம்மாக வைத்து ரோஷினி நடத்தியிருந்த போட்டோஷூட் அவரை மிகவும் பிரபலமாக்கியது.
சினிமாவில் வாய்ப்பு தேடிய காலத்தில் சீரியல் வாய்ப்பு வரவே அதை பயன்படுத்திக் கொண்ட ரோஷினி கண்ணம்மா கதாபாத்திரத்தின் மூலம் கூடுதல் புகழை அடைந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் ரோஷினி மீண்டும் போட்டோஷூட்களில் இறங்கி அடித்து வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற மேலாடையில், குட்டையான வெள்ளை பாவடையுடன் அவர் வெளியிட்டிருக்கும் போட்டோஷூட் காண்பவர்கள் கண்களை பறித்து வருகிறது.
ரோஷினி ஹரிப்ரியன் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு அசத்தி வருகிறார்.