‛மயோன் 2' உருவாகிறது | யானை படம் : பிரியா பவானி சங்கர் நம்பிக்கை | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கிர்த்தி ஷெட்டி | திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை : ஸ்ருதிஹாசன் | மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா | கமலுக்கு கோல்டன் விசா | பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம் | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு | இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் - பிரித்விராஜ் | மோகன்லாலுக்கு வில்லனாக மாறும் ஹரீஷ் பெராடி |
கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், விநாயகன் இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜும் நடித்திருந்த 'பட' என்கிற படம் வெளியானது. கே.எம்.கமல் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கேரளாவில் ஆதிவாசிகள் மற்றும் தலித் நடத்திய போராட்ட களத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. விமர்சன ரீதியாக பாராட்டுக்களையும் இந்த படம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார்
இதுபற்றி அவர் கூறும்போது, 'இந்த படம் தற்போது வெளியாகி உள்ளது. இதை தியேட்டரில் தான் பார்க்கவேண்டும். உண்மை சம்பவங்களின் பின்னணியில் பவர்ஃபுல்லான அதேசமயம் பொழுதுபோக்கு அம்சத்துடன் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதை மலையாள சினிமாவின் திருப்பங்கள் கொண்ட ,'டாக் டே ஆப்டர்நூன்' படம் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று பாராட்டியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள இந்த டாக் டே ஆப்டர்நூன் படம் ஹாலிவுட் இயக்குனர் சிட்னி லூமெட் என்பவர் இயக்கி ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் இடம் பிடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.