தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பத்திரிகையாளராக இருந்து இயக்குனர் ஆனவர் சந்திரா தங்கராஜ். அமீர், வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றிய இவர் இயக்கிய கள்ளன் என்ற படம் நேற்று வெளியானது. இந்த படம் குறிப்பிட்ட ஜாதியை திருடர்களாக சித்தரிப்பதாக கூறி தென் மாவட்டங்களில் பல இடங்களில் படத்தை திரையிட விடாமல் தடுத்தனர்.
இதுகுறித்து சந்திரா தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளன் என்ற தமிழ் சொல் திருடர்களை தான் குறிக்கிறது. ஏற்கனவே திருடன், கள்வர் போன்ற பெயர்களில் படங்கள் உள்ளதால் கள்ளன் என்ற சொல்லை டைட்டிலாக வைத்தேன். அதை புரிந்து கொள்ளாமல் ஜாதி அமைப்பைச் சேர்ந்த ஒரு தலைவர் என்னுடைய தொலைபேசி எண்ணை பொதுவெளியில் அனுப்பியிருக்கிறார்.
அவர்கள் பின்னிரவு நேரங்களில் போன் போட்டு ஆபாசமாகப் பேசுகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருத்தர் ஆபாச படங்களை அனுப்பி இது போல் எனக்கும் பண்ண முடியுமா என்று கேட்கிறார்.கடந்த ஒரு மாதமாகவே இது போல் ஆபாச தாக்குதல் நடத்துகிறார்கள். இதுதான் பெண்களுக்கு இவர்கள் கொடுக்கிற மரியாததை.
நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும் இந்த நாட்டில் ஜாதி அமைப்புகளின் ஆதிக்கம் தலை தூக்க விடாமல் முதலமைச்சர் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார் சந்திரா தங்கராஜ். பேட்டியின் போது தயாரிப்பாளர் மதியழகன் உடன் இருந்தார்.