Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுசை காப்பாற்றுவாரா திருச்சிற்றம்பலம்?

19 மார், 2022 - 13:48 IST
எழுத்தின் அளவு:
Dhanush-Thiruchitrambalam-releasing-on-July

அசுரன் படம் பெரிய வெற்றி பெற்றது. தனுசுக்கு தேசிய விருது பெற்றுத் தந்தது. தனுசுக்கு வெற்றியும், விருதும் கிடைத்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. அசுரனுக்கு பிறகு வெளிவந்த படங்களில் கர்ணன் மட்டுமே ஓரளவுக்கு தனுசை காப்பாற்றியது, என்னை நோக்கி பாயும் தோட்டா, பட்டாஸ், ஜெகமே தந்திரம், மாறன், பாலிவுட் படமான அந்தராங்கி ரே என ஆகிய படங்கள் பெரிய அளவில் மக்களை கவரவில்லை. அதிலும் கடைசியாக அவரின் மூன்று படங்கள் ஓடிடியில் வெளிவந்தன. இதனால் வணிக ரீதியாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அடுத்து ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தனுஷ்.

இந்த நிலையில் அடுத்து வெளிவர இருக்கிறது திருச்சிற்றம்பலம். தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கி உள்ளார். தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தின் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளது.

திருச்சிற்றம்பலம் வெற்றி அடைவதற்கான சாத்தியக்கூறுகள் இந்த படத்தில் அதிகம் உள்ளது. தனுஷ், மித்ரன் ஜவஹர் கூட்டணி தொடர்ந்து வெற்றிப் படங்களை தந்திருக்கிறது. 7 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் என மூன்று கலர்புல் ஹீரோயின்கள் இருக்கிறார்கள். போதா குறைக்கு பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார்கள். ஒரு பக்கா கமர்ஷியல் பேக்கேஜோ படம் வருகிறது. வருகிற ஜூலை 1ம் தேதி படம் வெளிவரும் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தீம் பாடலில் வெளியான பிச்சைக்காரனின் கதைதீம் பாடலில் வெளியான ... ஆர்ஆர்ஆர் படத்திற்கு ஆந்திர அரசு சலுகை ஆர்ஆர்ஆர் படத்திற்கு ஆந்திர அரசு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

tamilan - CHENNAI,இந்தியா
26 மார், 2022 - 12:43 Report Abuse
tamilan குடும்ப வாழ்க்கையில் தோற்றவன் வெற்றி அடைவது ரொம்ப கஷ்டம். உதாரணம் கமல்ஹாசன் கமல் என்று வாணியை பிரிந்தாரோ ஆண்ட்ரே அவரின் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர் சரிகாவை ஏமாற்றி திருமணம் செய்யாமல் இருந்தார். கோர்ட் கேஸ் என்று சென்று திருமணம் செய்தார். சரிகா வந்த பின்னர் மீண்டும் வெற்றி கண்டார். சரிகாவை என்று விட்டாரோ ஆண்ட்ரே அவரின் சினிமா வாழ்க்கை முடிவு பெற்றது. பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததால் அவரின் சொந்த வாழ்க்கையும் நன்றாக இல்லை சினிமா வாழ்க்கையும் நன்றாக இல்லை. அதை தனுஷும் செய்கிறார்.எவர் ஒருவர் பொண்டாட்டி பிள்ளைகளை ஒழுங்காக பார்க்கின்றாரோ அவரின் வாழ்க்கை தான் நன்றாக இருக்கும். இனி தனுஷுக்கு இறங்கு முகம் தான்.
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
21 மார், 2022 - 20:12 Report Abuse
RaajaRaja Cholan ஜாரி ஜோக்கர்
Rate this:
BalaG -  ( Posted via: Dinamalar Android App )
19 மார், 2022 - 15:52 Report Abuse
BalaG நீங்க சொன்ன பாயிண்ட் எல்லாம் ரொம்ப முக்கியமா படம் வெற்றி அடையறதுக்கு? அவரை ஏற்றி விட்டு உடம்பை ரணகளம் ஆக்கீடுவீங்க போல..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in