'லியோ' படத்திற்குப் பிறகு தவிக்கும் தியேட்டர்காரர்கள் | அமிதாப் குடும்பத்தின் அடுத்த வாரிசு… | த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது ஒரு கோடி நஷ்டஈடு கேட்டு மன்சூர் அலிகான் வழக்கு | நடிகர் டாக்டர் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் | பாலிவுட் நடிகர் ஜூனியர் மெஹ்மூத் காலமானார் | 2023ல் ஹிந்தியில் 500 கோடி வசூல் படங்களைக் கொடுத்த தென்னிந்திய இயக்குனர்கள் | ‛முண்டாசுப்பட்டி' புகழ் நடிகர் ‛மதுரை' மோகன் காலமானார் | பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார் | என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா |
1994ம் ஆண்டு கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் வீட்ல விசேஷங்க. இதில் கே.பாக்யராஜ், பிரகதி, மோகனா, ஜனகராஜ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படத்திற்கு வீட்ல விசேஷம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
இதனை ஆர்ஜே.பாலாஜியும், என்.ஜே.சரவணனும் இணைந்து இயக்கி இருக்கிறார்கள், போனி கபூர், ராகுல், ஜீ ஸ்டூடியோ இணைந்து தயாரித்திருக்கிறது. அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, சத்யராஜ் உள்ளபட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைத்துள்ளார்.
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்த படம் வருகிற ஜூன் 17ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குடும்ப காமெடி படம் குடும்பத்தோட வாங்க என்றும் அழைக்கிறார்கள்.