இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு | சின்னத்திரையில் பார்த்திபன் |
2016ம் ஆண்டு வெளியான படம் தர்மதுரை. விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். யுவன் இசை அமைத்திருந்தார், சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார், சீனு ராமசாமி இயக்கியிருந்தார்.
ஆர்.கே சுரேசுக்கு விஜய் சேதுபதி கால்ஷீட் கொடுத்திருந்தார். இருவர் கூட்டணியில் ஒரு படமும் அறிவிக்கப்பட்டு டிராப் ஆனது. அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் சீனு ராமசாமி தலையிட்டு தீர்த்து வைத்து ஒரு படமும் இயக்கி கொடுத்தார். அதுதான் தர்மதுரை.
தர்மதுரை இரண்டாம் பாகம் எடுக்க சீனு ராமசாமி முயற்சித்து வந்தார். ஆனால் விஜய் சேதுபதி தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் தற்போது ஹீரோவாக நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க சீனு ராமசாமி முயற்சிக்கிறார் என்ற தகவல்கள் வெளியானது. இதனை சீனு ராமசாமி மறுத்திருந்தார்.
இந்த நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டணி இப்போதைக்கு விஜய்சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கி உள்ள மாமனிதன் படத்தின் விநியோகம் தொடர்பாக. மாமனிதன் படத்தின் தமிழ்நாடு மற்றும் கேரள விநியோக உரிமத்தை ஆர்.கே.சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனம் வாங்கி உள்ளது. இதனை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்த கூட்டணி இப்படியே தொடர்ந்தால் தர்மதுரை இரண்டாம் பாகம் உருவாகும் என்று கூறப்படுகிறது.