விரைவில் 'அயலான்' டீசர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | திருப்பதி ஏழுமலையானை தரிசித்த கீர்த்தி சுரேஷ் | ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு | கங்குலி பயோபிக் சினிமாவாக உருவாகிறது | இயக்குனர் அவதாரம் எடுத்த கீர்த்தி சுரேஷின் சகோதரி | ஜெயிலர் படத்தின் அப்டேட் தந்த தமன்னா | லியோ படத்துடன் கேப்டன் மில்லர் மோதுமா? | மாவீரன் படத்தை கைப்பற்றிய லைகா | 'மல்லி பெல்லி' : சொந்தக் கதையில் நடித்துள்ள நரேஷ் - பவித்ரா | ஆர்.ஜே.ரவிக்கு ஆதரவாக பதிவிட்ட வெண்பா : சம்யுக்தா சொல்வது பொய்யா? |
பிக்பாஸ் அல்டிமேட் நிகச்சியில் போட்டியாளராக நுழைந்த வனிதா அதன்பின் பிக்பாஸ் வீட்டிலிருந்து தாமாகவே வெளியேறினார். அதுமுதலே பிக்பாஸ் முன்போல் இல்லை. எல்லாமே தவறாக நடக்கிறது என விமர்சித்திருந்தார். அதனால் தான் கமல் கூட வெளியேறிவிட்டார் எனவும் குண்டைத் தூக்கி போட்டார். தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை குறித்து சர்ச்சையான கருத்துகளை பதிவிட்டு வந்த அவர், இப்போதும் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தனது பொழுதுபோக்கு தன்மையை இழந்துவிட்டது. வன்முறை, சண்டைகள், தவறான வார்த்தைகள் என மன உளைச்சலை தரும் வகையில் உள்ளது. இது உங்களை கொல்லக்கூடும்.' என கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகச்சியின் மூலம் பிரபலமான வனிதா, தற்போது அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியையே விமர்சித்து வருவது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.