'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛பீஸ்ட்'. அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அடுத்தமாதம் படம் வெளியாக உள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக உள்ளார் நெல்சன். இதனிடையே ஏற்கனவே பீஸ்ட் படத்தில் இருந்து முதல் பாடலாக அரபிக் குத்து வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
அடுத்து இரண்டாவது பாடலை மார்ச் 19ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். ஜாலியோ ஜிம்கானா என்ற பாடலை நடிகர் விஜய் பாடி உள்ளார். இதற்கான புரொமோ வெளியாகி உள்ளது. அதில் விஜய், பூஜா, அனிருத், நெல்சன் ஆகியோர் ஜாலியாக பாடுவது போன்று காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
சினிமாவின் ஆரம்பகாலம் முதலே தனது படங்களில் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ள விஜய் கடைசியாக வெளியான மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி பாடலை பாடினார். இப்போது இந்த பாடலை பாடி உள்ளார். பொதுவாகவே விஜய் பட பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும், எதிர்பார்ப்பும் இருக்கும். இப்போது விஜய்யே இந்த பாடலை பாடியிருப்பதால் அது இன்னும் அதிகமாகி உள்ளது.




