புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் - பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்தப் படம் மார்ச் 11ம் தேதி திரைக்கு வந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ராதே ஷ்யாம் படம் இரண்டு நாட்களில் 119 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அந்தவகையில் 2022ம் ஆண்டில் வெளியான படங்களில் அஜித்தின் வலிமை 3 நாட்களில் 100 கோடி வசூலை கடந்த நிலையில் தற்போது பிரபாஸின் ராதே ஷ்யாம் படம் இரண்டே நாட்களில் 119 கோடி வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.