ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி | பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட் | ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? |

வலிமை படத்தில் சண்டைக் காட்சியில் நடித்தபோது அஜித்தின் கையில் காயம் ஏற்பட்டு அதற்கு மருத்துவர் ஒருவர் மருந்து போட்டு விடும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் தற்போது வலிமை படப்பிடிப்பு நடைபெற்று வந்த போது ட்ரோன் கேமராவை அஜித் இயக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், வலிமை படப்பிடிப்பு நடைபெற்றபோது சில நாட்களில் அஜித்குமார் ட்ரோன் கேமராவை இயக்கினார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் தற்போது அதுகுறித்து வீடியோ வெளியாகி இருப்பது அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அஜித்குமாரை பொருத்தவரை பைக் ரேஸ் மட்டுமன்றி படப்பிடிப்புத் தளங்களில் சிறிய ரக விமானங்களை பறக்க விடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதையடுத்து தற்போது ட்ரோன் கேமராக்களையும் இயக்க தொடங்கி இருக்கிறார்.