அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருது நாயகன் என அழைக்கப்படும் ரஹ்மான் உலக அளவிலும் புகழ் பெற்றவராக இருக்கிறார். தன்னுடைய குடும்பப் புகைப்படங்களை அவ்வளவாக சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டதில்லை. எப்போதவாது மகனுடன் இருக்கும் புகைப்படங்களையும், மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிடுவார். மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிடுவது அபூர்வம்.
இன்று தன்னுடைய 27வது திருமண நாளை முன்னிட்டு மனைவி சாய்ரா பானுவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஒன்றாக இருப்பது ஒரு கலை…எல்லாப் புகழும் இறைவனுக்கே,” என்று பதிவிட்டுளளார். அவர்களுக்கு ரசிகர்கள் பலரும் மணநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ஏஆர்.ரஹ்மான் தற்போது தமிழில் 'பொன்னியின் செல்வன், இரவின் நிழல், வெந்து தணிந்தது காடு, மாமன்னன்' ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.