கடவுள் பெயரில் டைட்டில்கள் : கண்டிப்பு காட்டும் தணிக்கை குழு | பிளாஷ்பேக்': சினிமாவில் ஜெயிக்க முடியாத லட்சிய நடிகரின் மகன் | பிளாஷ்பேக் : ஹேமமாலினிக்கு செட்ட ஆகாத தமிழ் சினிமா | செல்வராகவன் அக்காவாக மாறிய கவுசல்யா | திருவண்ணாமலையில் படமாக்கப்பட்ட 'கொலைச் சேவல்' | ஓடிடியில் டாப் 2ல் 'வித் லவ்' | 'துரந்தர் 2' பிரிமியர்: தமிழகத்தில் சிறப்பான முன்பதிவு | எம்ஜிஆர் பற்றி 'கிண்டலாக' பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் | மார்ச் 18ல் 'அல்லு சினிமாஸ்' ஆரம்பம் | தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் |

அஜித், வினோத், போனி கபூர் கூட்டணியில் நேர்கொண்டப்பார்வை, வலிமை ஆகிய இரண்டு படங்கள் இதுவரை வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அஜித் நடிக்கும் 61 வது படத்தை போனி கபூர் தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்தார்.
இந்த திரைப்படம் குறித்து ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதன்படி அஜித்தின் 61வது படம் கொள்ளையடிப்பது (Heist) குறித்து தான் இருக்கப் போகிறதாம். இந்த படத்தில் அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றதாகவும் , படப்பிடிப்பு ஐதராபாத்தில் மார்ச் மாதம் 19 ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .